கொரோனாவை விட பெரிய ‘அச்சுறுத்தல்’ இதுதான்.. இதுக்கு ‘தடுப்பூசி’ எல்லாம் கிடையாது.. செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை விடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. தற்போது வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை விட பருவநிலை மாற்றும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ஜெனீவாவை சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவை சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஜெகன் சாப்பகெய்ன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘1960-களில் இருந்து உலகம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரிடர்களை சந்தித்துள்ளது. இதில் பெரும்பாலானவை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதுதான். இதனால் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது கொரோனா வைரஸ் நம் கண் முன்னால் இருப்பது உண்மைதான். இதனால் உலகம் தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கி 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி வந்த பிறகு அதனைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் பருவநிலை மாற்றம் என்பது அப்படிப்பட்டது இல்லை. இதற்கு தடுப்பூசியும் இல்லை. வானிலை மற்றும் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளின் தீவிரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-ல் மட்டும் உலகம் முழுவதும் 308 இயற்கையான பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 77 சதவீதம் வானிலை அல்லது பருவநிலை சம்பந்தப்பட்டவைதான். இதில் 24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதம் 1990-ல் இருந்ததை விட 35 சதவீதம் அதிகரித்துள்ளது’ என ஜெகன் சாப்பகெய்ன் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்