'எமனையே நீ ஜெயிச்சுட்டே'... 'ரீஎன்ட்ரி கொடுத்த சிறுவன்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரத்த புற்று நோயினால் அவதிப்பட்டு, மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த சிறுவனுக்கு அவனது நண்பர்கள் கொடுத்த வரவேற்பு பலரையும் நெகிழ செய்துள்ளது.

'எமனையே நீ ஜெயிச்சுட்டே'... 'ரீஎன்ட்ரி கொடுத்த சிறுவன்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!

ஜான் ஆலிவர் ஜோ என்ற ஆறு வயது சிறுவன், கடந்த 2017ம் ஆண்டு லுகேமியா என்ற ரத்த புற்று நோயினால் தாக்கப்பட்டான். ஆனால் அவனது பெற்றோர்களுக்கு ஜோ புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியாது. அவன் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகவே அவனை மருத்துவர்களிடம் காட்டி பரிசோதனை செய்தார்கள். அப்போது மருத்துவர்களின் பதில் ஜோவின் பெற்றோர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஜோவிற்கு ரத்த புற்றுநோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், அவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்கள். இதனைத்தொடர்ந்து ஜோவிற்கு பல கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மரணத்தின் பிடியில் இருந்து தப்பியா ஜோ, தற்போது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளான். இதனை மகிழ்விக்கும் விதமாக ஜோவின் பள்ளி தோழர்கள் ஜோ புற்றுநோயில் இருந்து வெளிவந்து பள்ளிக்கு வந்த முதல் நாளில் அவனை வரவேற்க அனைவரும் ஒன்று கூடி கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கைதட்டி வரவேற்க அதன் சத்தம் விண்ணை பிளந்தது. பலரையும் நெகிழ செய்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SCHOOLSTUDENT, LEUKEMIA, CANCER, CLASSMATES, JOHN OLIVER ZIPPAY