‘தாலிபான்கள் 40 பேரை கைது பண்ணிட்டோம்... அதுமட்டும் இல்ல...!’.. யாருப்பா இவங்க..? என்ன நடக்குது பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில்..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணி படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தாலிபான்கள் 40 பேரை கைது பண்ணிட்டோம்... அதுமட்டும் இல்ல...!’.. யாருப்பா இவங்க..? என்ன நடக்குது பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில்..?

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. அங்கு மறைந்த ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையில் ‘வடக்கு கூட்டணி’ என்ற எதிர்ப்பு படை உருவாகியுள்ளது. ஆப்கான் வரலாற்றில் நடந்த பல போர்களில் எந்தவொரு இயக்கங்களாலும் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாலிபான்களுக்கும் இந்த அமைப்பு தலைவலியாக அமைந்துள்ளது. இதனால் தாலிபான்களுக்கும், வடக்கு கூட்டணிக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று இரவு இரு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது 8 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஏராளமான தாலிபான்கள் அப்பகுதியில் குவித்துள்ளனர். இதனால் இரு படைகளுக்கும் இடையே கடுமயான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 350 தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 40 பேரை சிறைபிடித்துள்ளதாகவும் வடக்கு கூட்டணி படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இரு படைகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்