RRR Others USA

இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. ஆஸ்கார் மேடையில் வில் ஸ்மித்திடம் பளார் வாங்கிய கிறிஸ் ராக்-க்கு அடிச்ச ஜாக்பாட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி பற்றி பேசிய கிறிஸ் ராக்கை அறைந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. ஆஸ்கார் மேடையில் வில் ஸ்மித்திடம் பளார் வாங்கிய கிறிஸ் ராக்-க்கு அடிச்ச ஜாக்பாட்..!

"27 வருஷமா எங்க அம்மா சொன்ன பொய்ய நம்பிட்டு இருந்தேன்.. அப்பறம் தான் அந்த உண்மை தெரிஞ்சது" KL ராகுல் சொல்லிய சுவாரஸ்ய தகவல்..!

ஆஸ்கார்

திரைத்துறையில் அளிக்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று ஆஸ்கார். உலகம் முழுவதும் வெளியாகும் படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து கலைஞர்களுக்கு விருது அளிக்கும் இந்த விழா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நேற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. ஆஸ்கார் விழாவில் மொத்தம் 23 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

Chris Rock comedy tour ticket price skyrocketed after Oscar 2022

கோபமடைந்த ஸ்மித்

தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து பேசினார். இதனால் கோபமடைந்த ஸ்மித் மேடைக்கு சென்று ராக்கை பளார் என்று அறைந்துவிட்டு கீழே இறங்கி சென்றார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Chris Rock comedy tour ticket price skyrocketed after Oscar 2022

மன்னிப்பு

இதனை அடுத்து தன்னுடைய செயலுக்கு வருந்துவதாகவும் மன்னிப்பு கேட்பதாகவும் வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில்,"எந்த வடிவில் வன்முறை இருந்தாலும் அது நச்சுத்தன்மையானது, அழிக்கக்கூடியது. கடந்த இரவில் அகாடமி விருதுகளின் போது என்னுடைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது. பொதுவெளியில் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் கிறிஸ். நான் வரம்பு மீறிவிட்டேன், நான் தவறு செய்திருக்கிறேன். அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்மித்.

Chris Rock comedy tour ticket price skyrocketed after Oscar 2022

அதிர்ஷ்டம்

இந்நிலையில், வரும் மார்ச் 30 - ஏப்ரல் 1 ஆம் தேதிவரையில் பாஸ்டனில் உள்ள வில்பர் தியேட்டரில் ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் கிறிஸ். ஆஸ்கார் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த காமெடி நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறுவனமான TickPick தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து டிவிட்டரில் அந்த நிறுவனம்,"கடந்த மாதத்தில் நாங்கள் விற்பனை செய்ததை விட ஒரே இரவில் கிறிஸ் ராக் நிகழ்ச்சிக்கு அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

Chris Rock comedy tour ticket price skyrocketed after Oscar 2022

எகிறிய விலை 

கிறிஸ் ராக் நிகழ்ச்சியின் குறைந்தபட்ச டிக்கெட் விலை மார்ச் 18 அன்று 46 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் 3,500 ரூபாய்) இருந்தது.  தற்போது 411 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் 31,274 ரூபாய்) அதிகரித்துள்ளது.

ஆஸ்கார் விழாவில் வில் ஸ்மித்தால் தாக்கப்பட்ட கிறிஸ் ராக்கின் காமெடி நிகழ்ச்சிக்கு ராக்கெட் வேகத்தில் டிக்கெட் விற்பனையாகிவருவது பலரையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது.

"எப்போதான் அந்த 30 பேப்பரை க்ளியர் பண்ணுவ".. "எங்கம்மாவுக்கு அதுதான் கவலை".. கலகலத்த KL ராகுல் ..!

OSCAR 2022, WILL SMITH, CHRIS ROCK, வில் ஸ்மித், கிறிஸ் ராக்

மற்ற செய்திகள்