‘ஊரடங்கை தளர்த்த முடியாமல் தவிக்கும் உலக நாடுகள்’... ‘திரும்பவும் களைக்கட்ட தொடங்கியதால்’... ‘ஒரே நாளில் வசூலை அள்ளிய சீனா’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள சீனாவில், திரும்பவும் களைக்கட்ட தொடங்கிய சுற்றுலா தலங்களால், சீனா வசூலை அள்ளத் தொடங்கியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள மக்களை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் முடக்கிப் போட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து மிக குறுகியக் காலத்தில் மீண்ட சீனாவில், சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமார் 70 சதவிகித உள்ளூர் சுற்றுலாத் தளங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 8 கோடியே 50 லட்சம் மக்கள், கடந்த 3 நாட்களில் சுற்றுலாப் பயணம் செய்துள்ளனர். அதிலும் இன்று ஞாயிறு என்பதால், கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு திறக்கப்பட்ட முதல் நாளில் 13 ஆயிரம் கோடி ரூபாயும், 3 நாட்களில் 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இருப்பினும் திறந்தவெளி சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.