'எப்பேற்பட்ட டெக் மில்லியனர்!'.. ‘ரியாலிட்டி ஷோவில் இருந்து நீக்கப்பட்ட பின் நடந்தது என்ன?’.. பரபரப்பை கிளப்பும் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீன அரசாங்கத்தின் அண்மைக்கால அணுகுமுறை தொடர்பாக உலகின் மிக முக்கியமான தொழிலதிபராக அறியப்படும் பிரபல அலிபாபா நிறுவன தலைவரும் தொழிலதிபருமான ஜாக் மா மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

'எப்பேற்பட்ட டெக் மில்லியனர்!'.. ‘ரியாலிட்டி ஷோவில் இருந்து நீக்கப்பட்ட பின் நடந்தது என்ன?’.. பரபரப்பை கிளப்பும் தகவல்கள்!

ALSO READ: 'இவன் கொரோனாவுக்கே அப்பன்!'.. 'மனித' குலத்தையே 'அழிக்க' வரும் அடுத்த 'பெருந்தொற்று'!.. எபோலாவை கண்டுபிடித்த 'மருத்துவ விஞ்ஞானி' கூறிய 'அதிர்ச்சி' தகவல்!

புகழ்பெற்ற பிரபல சாதனையாளரான ஜாக் மா, 1999 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து அலிபாபா என்கிற மிகச் சிறிய வர்த்தக நிறுவனத்தை உருவாக்கி சீனாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 21-ஆம் இடத்தை பிடித்திருந்தார். இவர் 2018ம் ஆண்டின் இறுதியில் அலிபாபா நிறுவனத்தின் தலைவராக இருந்த பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். பிறகு ஓய்வு பெற்றார்.

தற்போது 56 வயதாகி இருக்கிற இவர் ஆப்பிரிக்க தொழில்முனைவோருக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டு வந்திருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி இருந்த நிலையில், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் இணைய பக்கத்தில் இருந்தும் அவருடைய புகைப்படம் உள்ளிட்ட பல காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவான இவர், சமீபத்தில் சீன அரசாங்கம் மற்றும் வங்கிகள் மீது தன்னுடைய அதிருப்தியும் கடுமையான விமர்சனத்தையும் வைத்திருந்த நிலையில் கடந்த மாதம் சீனா திடீரென்று அவருடைய நிறுவனத்தின் மீது எதிர்ப்பு விசாரணையை அறிவித்தது.  சீனாவின் பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான இவர், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் உலகின் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வந்த சூழலில், கொரோனா காலத்தில் அலிபாபா நிறுவனம் சார்பில் நன்கொடையாக மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

எனினும் தற்போது அவர் மாயமாகி உள்ளதாகவும் அதே சமயத்தில் அவர் இதுவரை எந்த ஆபத்திலும் சிக்கியுள்ளார் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் பன்னாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. ஆனால் சீனாவின் கொள்கைகளை விமர்சித்ததுடன், சீனாவின் ஜனாதிபதியை கோமாளி என்று விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென ஊழல் மற்றும் முறைகேட்டில் ஜாக் மா கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் விடுவிக்கப்பட்டார்.

ALSO READ: 'இது பேரழிவு.. நெலம ரொம்ப அபாயகரமா இருக்கு!'.. பிரபல லண்டன் மருத்துவமனையில் இருந்து ஊழியர்களுக்கு வந்த ‘பகீர்’ கிளப்பும் கடிதம்!

சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுக்கு அதிபரான ஜாக் மா, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பொதுவெளியில் தோன்றவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் மாயமாகி இருக்கிறாரோ என்று பன்னாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

மற்ற செய்திகள்