'கொரோனா சீன ஆய்வகத்தில் உருவாகவில்லையா'?... 'என்ன சார் பித்தலாட்டம் இது'... 'வசமாக சிக்கிய சீனா', உண்மையை உடைத்த சுவிட்சர்லாந்து!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுவிஸ் அறிவியலாளர் ஒருவர் சொன்னதாக வெளியான கருத்துக்கு சுவிட்சர்லாந்து பதிலடி கொடுத்துள்ளது.

'கொரோனா சீன ஆய்வகத்தில் உருவாகவில்லையா'?... 'என்ன சார் பித்தலாட்டம் இது'... 'வசமாக சிக்கிய சீனா', உண்மையை உடைத்த சுவிட்சர்லாந்து!

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக சுவிஸ் அறிவியலாளர் ஒருவர் வெளியிட்ட செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெரும் விவாதம் எழுந்தது.

சுவிட்சர்லாந்தின் Bern பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அறிவியலாளரான Wilson Edwards என்பவர், கொரோனா வைரஸ் சீன ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டது, என்னும் கருத்தை நிராகரிக்கும் வகையில், அப்படி ஒரு கருத்தை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக செய்தி வெளியிட்டார்.

Chinese state media caught inventing a Swiss biologist who blamed US

இதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட சீனா, எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை முன்னரே கூறிக்கொண்டு இருக்கிறோம். இப்போது பாருங்கள் சுவிஸ் அறிவியலாளரே சொல்லிவிட்டார். கொரோனா எங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.

Chinese state media caught inventing a Swiss biologist who blamed US

இந்நிலையில் , பீஜிங்கிலுள்ள சுவிஸ் தூதரகம் Wilson Edwardsஐக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. பிறகுதான் தெரியவந்தது Wilson Edwards என்று ஒரு அறிவியலாளர் இல்லை என்பதும், இது சீனா அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை என்பதும். எனவே Wilson Edwards குறித்து வெளியிடப்பட்ட செய்திகளைத் திருத்தி வெளியிடுமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மற்ற செய்திகள்