“அப்ப கொரோனாவுல இந்த வியாபாரம்தான் போய்க்கிட்டு இருக்கு!!”.. ‘இரண்டு மடங்கான உற்பத்தி’.. இதுதான் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கவர்ச்சி உருவபொம்மை உற்பத்தி இவ்வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் ஒரு கோடியே 48 லட்சத்தை கடந்து போய் கொண்டிருக்கும் நிலையில் நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 6.14 லட்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் 21 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கும், , ரஷ்யாவில் 7 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கும், இந்தியாவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனாவிலிருந்து 86 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டுக்குள்ளேயே பலரும் முடங்கியதாலும், தனைமைப்படுத்திக் கொண்டு இருப்பதாலும், சமூக இடைவெளியைக் கடைபிடித்துக் கொண்டு இருப்பதாலும் தனிமையை அதிகளவில் உணர்ந்துள்ளனர். இதனால் சீனாவின் தயாரிப்பான கவர்ச்சிகரமான பொம்மைகளை பலரும் வாங்கி வருகின்றனர். இதனால் வழக்கமானதை விடவும் இருமடங்காக இந்த வகையான பொம்மைகளின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்