'விந்து வழியாக பரவும் கொரோனா...' 'ஷாக் ஆன ஆண்கள்...' இம்யூன் சிஸ்டம் வேலை செய்யாது...' அதிர்ச்சி தரும் சீனா விஞ்ஞானிகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதித்த ஆண்களின் விந்தணுவிலும் கொரோனா வைரஸ் காணப்படுவதாகவும், அதன் வழியே கூட கொரோனா பரவும் அபாயமும் எதிர்காலத்தில் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
உலகம் முழுவதும் தனது ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா வைரஸின் பரவும் தன்மையும், அறிகுறிகளும் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் சீனா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி வீடுகளில் அடைந்திருக்கும் ஆண்களுக்கு மேலும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதுகுறித்து பேசிய சீன ஆய்வாளர், சீனாவின் ஷன்குவி முனிசிப்பல் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிருந்த ஒரு சில ஆண்களின் விந்தணுவில் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 கொரோனா நோயாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், இவர்களில் ஆறு பேருக்கு அதாவது 16% பேருக்கு அவர்களின் விந்தணுவில் கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்துள்ளது என்ற ஆய்வு முடிவுகள் ஜாமா நெட்வொர்க் இதழில் வெளியாகி உள்ளது.
இந்த வகை கொரோனா வைரஸ் SARS-CoV-2 என்று அழைக்கப்படுவதாகவும் சீன மக்கள் லிபரேஷன் ஆர்மி ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டயாங்கெங் லீ தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு உள்ளவருடன் உடலுறவு கொள்வதன் மூலமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது.
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், வெறும் ஆண்களின் விந்தணுவால் கொரோனா வைரஸால் இனப்பெருக்கம் செய்ய முடியாது என்கின்றனர். ஆனால் விந்தணு கருமுட்டையில் செலுத்தப்படும் போது உடல் நோய் எதிர்ப்பு சக்தி பயன்படாது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் பாலியல் ரீதியாக பரவும் ஒரு சிறிய வாய்ப்பைத் திறந்து விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த புதுவித வைரஸின் உயிர்வாழும் நேரம், வைரஸ் உதிர்தல், உயிர்வாழும் நேரம் மற்றும் விந்து செறிவு பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யவேண்டிய நேரம் இது எனவும் ஜமா நெட்வொர்க் ஓபனில் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.