'வெளியில் தெரிய வருகிறதா சீனாவின் உண்மை முகம்'?... 'இதற்காக தான் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்?'... அதிரவைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தைத் தயாரிக்கச் சீன ராணுவம் திட்டமிட்ட ரகசியத் தகவல் சர்வதேச அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'வெளியில் தெரிய வருகிறதா சீனாவின் உண்மை முகம்'?... 'இதற்காக தான் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்?'... அதிரவைக்கும் பின்னணி!

கடந்த வருடம் சீனாவின் வுகான் நகரில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியது. அதன் தாக்கம் தற்போதும் குறையவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை தற்போது வேகமாக உள்ளது. இது முதல் அலையை விடப் படு தீவிரமாகப் பரவி வருகிறது.

Chinese scientists discussed weaponising SARS coronaviruses in 2015

இதற்கிடையே சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும், இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாகத் தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது. இது ஒரு புறம் இருக்க சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசைச் செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தச் சீனா திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான சீன ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ''கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுக்கு முன் 2015-ம் ஆண்டில் சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சுகாதார நிபுணர்கள் இணைந்து சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தைத் தயாரித்தனர். தேவைப்படும்போது இந்த வைரசை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.

Chinese scientists discussed weaponising SARS coronaviruses in 2015

போர்க்காலத்தில் மட்டுமின்றி, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்குச் சீனா திட்டமிட்டது. வைரஸ் இயற்கையாக உருவானதாகத் தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இயற்கையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டிருந்தது'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சீனா மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது அமெரிக்காவுக்குக் கிடைத்த இந்த ரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்