ஸ்கூல்ல நல்லா படிச்சா 'இந்த' மிருகக்குட்டி பரிசா கிடைக்குமாம்..!- மாணவர்களை உற்சாகப்படுத்தும் விநோத திட்டம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் உள்ள பின்தங்கிய ஓர் கிராமப் பகுதியில் இயங்கும் பள்ளியானது, தங்களிடம் படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து உள்ளனர்.

ஸ்கூல்ல நல்லா படிச்சா 'இந்த' மிருகக்குட்டி பரிசா கிடைக்குமாம்..!- மாணவர்களை உற்சாகப்படுத்தும் விநோத திட்டம்..!

அதாவது பொருளாதார ரீதியாக இன்னும் முன்னேற்றம் பெறாத அந்தப் பகுதியில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்றும், அதன் மூலம் உள்ளூர் பொருளாதார நிலை மாற வேண்டும் என்ற நோக்கிலும் பள்ளி நிர்வாகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பன்றிக் குட்டிகளை பரிசாக அளித்து சிறப்பித்து வருகிறது.

chinese school rewards piglets for excellen students

யுனான் பிராந்தியத்தில் உள்ள இலியாங் பகுதியில் அமைந்துள்ள சிங்யாங் ஆரம்பப் பள்ளிதான் இந்த வித்தியாச முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதுவரை கல்வியில் சிறந்து விளங்கிய 20 மாணவர்களுக்குப் பன்றிக் குட்டிகள் பரிசாக கொடுக்கப்பட்டு உள்ளன.

ஷாங்காய் சியாங்வூ பொது நலத் திட்டம் மூலம், சீனாவின் கிராமப்புற பொருளாதாரத்தை வளர்க்க நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் இருந்துதான் இந்தப் பன்றிக் குட்டிப் பரிசுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

chinese school rewards piglets for excellen students

தற்போது சிங்யாங் ஆரம்ப பள்ளியில் வெறும் 65 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இப்படி பன்றிக் குட்டிகளை பரிசாக கொடுப்பது சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பலரும், ‘பன்றிக் குட்டிகளைப் பரிசாக வாங்கிய குழந்தைகளின் பெற்றோர்கள், அவர்களை நினைத்துப் பெருமிதம் கொள்ள வேண்டும். மிகவும் சிறய வயதிலேயே அந்தக் குழந்தைகள் இப்படி தங்கள் குடும்பத்துக்காக பன்றிகளை வருமானமாக ஈட்டித் தந்துள்ளனர்.

chinese school rewards piglets for excellen students

உண்மையில் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாணவருக்கு சான்றிதழ் கொடுப்பதைவிட இதைப் போன்ற பரிசுகள் அதிக பயன் தரும். குறிப்பிட்ட அந்தக் குடும்பங்கள், பன்றிகள் மூலம் மாணவர்களின் கல்விக்காக புத்தகங்களை வாங்கித் தர முடியும்’ என்று கருத்து கூறியுள்ளனர்.

STUDENTS, CHINESE SCHOOLS, PIGLETS GIFT, SCHOOL STUDENTS, சீன பள்ளி, பன்றிக்குட்டி, மிருகக்குட்டி பரிசு

மற்ற செய்திகள்