ஜிம்பாப்வே கருப்பினத்தவரை சுட்ட சீன தொழிலதிபர்.. சம்பளம் வாங்கும்போது, நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜிம்பாப்வேயில் கருப்பினத்தவரை சுட்டுக் கொன்றதற்காக சீன தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே கருப்பினத்தவரை சுட்ட சீன தொழிலதிபர்.. சம்பளம் வாங்கும்போது, நடந்த கொடூரம்!

ஜிம்பாப்வேயில் அதிக முதலீடு செய்துள்ள நாடு சீனா. குரோமியம், இரும்பு, நிலக்கரி போன்றவற்றை சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கும் ஒப்பந்தம்தான் சீனாவுக்கு அந்நாட்டுக்கும் இடையில் உள்ளது.

இதற்கென 10 ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்கள் அங்கு வசித்து வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வேவின் Gweru மாகாணத்தில் செயல்பட்டு வரும் சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து வந்த Tachiona என்கிற கருப்பினத்தவர் தன்னுடைய சம்பளத்தை வாங்குவதற்காக வரிசையில் நின்றபோது வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரது வலது பக்க தொடையில் 3 முறையும், இடது பக்க தொடையில் 2 முறையும் என மொத்தம் 5 முறை சீன தொழிலதிபர் zhang xuen சுட்டுள்ளார். இதேபோல் இன்னொருவரை கன்னத்தில் சுட்டதாகவும், அதனால் அவர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இதனால் சீன தொழிலதிபர் zhang xuen கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்