"வீடியோ கேமை இனி தொடவே மாட்டேன்".. அப்பா கொடுத்த நூதன தண்டனை.. மகன் எடுத்த முடிவு.. திகைக்க வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் தன்னுடைய மகன் வீடியோ கேம் விளையாடுவதை தடுத்து நிறுத்த தந்தை ஒருவர் விநோத தண்டனையை அளித்திருக்கிறார். இது தொடர்பான பதிவுகள் சமூக வலை தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

"வீடியோ கேமை இனி தொடவே மாட்டேன்".. அப்பா கொடுத்த நூதன தண்டனை.. மகன் எடுத்த முடிவு.. திகைக்க வைக்கும் பின்னணி..!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..

வீடியோ கேம்

இணையத்தின் வளர்ச்சியால் மனித குலம் பல்வேறு நன்மைகளை பெற்று வருகிறது. தகவல் தொடர்பு உலகில் பெரும் புரட்சியை இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதே வேளையில் சிறுவர்களின் கைகளில் மொபைல் போன்கள் ஒரு கை விலங்காகவே மாறிவிட்டன. குறிப்பாக வீடியோ கேம்கள் விளையாடும் சிறுவர்கள் நாளடைவில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்தும் வருகின்றனர்.

ஆனாலும் தங்களுடைய பிள்ளைகளிடமிருந்து செல்போனை வாங்க பல பெற்றோர்கள் போராட வேண்டி இருக்கிறது என்பதை உண்மையாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சீனாவை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனுக்கு வீடியோ கேம் விளையாடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விளக்க நினைத்திருக்கிறார். இதற்கு அவர் கொடுத்த தண்டனை தான் உலக அளவில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

Chinese man who makes his son to play for 17 hours straight

Images are subject to © copyright to their respective owners.

சீனாவின் ஷென்சான் பகுதியை சேர்ந்தவர் ஹுவாங். இவருடைய 11 வயது மகன் இரவு ஒரு மணிக்கு யாருக்கும் தெரியாமல் தன்னுடைய படுக்கையில் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறான். இதனை கவனித்த ஹுவாங் தன்னுடைய மகனுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளித்திருக்கிறார். அதாவது தொடர்ந்து 17 மணி நேரம் அந்த சிறுவனை வீடியோ கேம் விளையாட செய்திருக்கிறார் அவர்.

Chinese man who makes his son to play for 17 hours straight

Images are subject to © copyright to their respective owners.

நூதன தண்டனை

இரவு ஒரு மணி துவங்கி அடுத்த நாள் மாலையில் 6:00 மணி வரையில் இந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடி இருக்கிறான். ஒரு கட்டத்தில் சிறுவன் சோர்ந்து வாந்தி எடுக்கவே அதன் பிறகு அவனை தூங்க அனுமதித்திருக்கிறார் அவனது தந்தை. இது குறித்து இந்த சிறுவன் எழுதி உள்ள குறிப்பில் "வீடியோ கேம் விளையாடுகையில் என் தந்தை என்னை கண்டுபிடித்து தண்டித்தார். எனக்கு வாந்தி வரும் வரை விளையாட வைத்தார். நள்ளிரவு ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 17 மணி நேரம் விளையாடினேன். இனி 11 மணிக்கு முன் படுக்கைக்கு செல்வேன் என உறுதி அளிக்கிறேன். செல்வதற்கு முன்பு வீடியோ கேம் மற்றும் பொம்மைகளுடன் விளையாட மாட்டேன்" என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் சிறுவன். இதனை அந்த தனது தனது சமுக வலை தல பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதள வாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | "என்னதான் பெரிய பிளேயரா இருந்தாலும்.. என் அம்மா இத பத்தி கேட்டுட்டே இருப்பாங்க".. 14 வருஷத்துக்கு அப்புறம் டிகிரி.. ஷகிப் அல் ஹசன் உருக்கம்..!

CHINESE MAN, SON, PLAY, GAME

மற்ற செய்திகள்