14 வருஷமா வீட்டுக்கு போகாம ஏர்போர்ட்லயே தங்கியுள்ள நபர்.. இதுக்கா இப்படி ஒரு முடிவு..?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் வீட்டுக்கு போகாமல் 14 ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே ஒருவர் வசித்துவருகிறார். இதற்கு அவர் கூறிய காரணம் தான் அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.
சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் வீ ஜியாங்குவோ.இவர் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்து வருகிறார். சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் தங்கியுள்ள ஜியாங்குவோ, எப்போதும் தன்னைச் சுற்றி பயணிகள் இருப்பதால் தனக்கு எந்தவித கவலையும் இல்லை என கூறுகிறார்.
என்ன காரணம்?
வீ ஜியாங்குவோ புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இதற்கு அவரது வீட்டினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர் பேசும்போது," வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியாது. நான் வீட்டில் தங்க விரும்பினால் புகைப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும் என்று என் குடும்பத்தினர் சொன்னார்கள். மேலும் நான் அதை செய்யாவிட்டால் என்னுடைய மாதாந்திர அரசு உதவித் தொகையான 1000 யுவான்களை (150 அமெரிக்க டாலர்) அவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். பணத்தை அவர்களிடம் கொடுத்து விட்டால் மது மற்றும் சிகரெட் செலவிற்கு நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்கிறார் இவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் இவரை விமான நிலையத்திலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். விமான நிலையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இவரது வீட்டிற்கு கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால் சில நாட்களிலேயே இவர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து தங்க தொடங்கிவிட்டார்.
சுதந்திரம்
தனக்கு விமான நிலையத்தில் தான் ஓரளவு சுதந்திரம் இருப்பதாக இவர் தெரிவித்ததையடுத்து அதன்பிறகு அதிகாரிகள் இவரை தொந்தரவு செய்யவில்லையாம். விமான நிலையத்திலேயே தூங்கிக் கொள்ளும் இவர் காலையில் சந்தைக்குச் சென்று வேகவைத்த பன்றி இறைச்சி ரொட்டிகள், சில உணவுப் பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கிறார். அரசு தரும் மாதாந்திர உதவித் தொகையை வைத்து தன்னுடைய செலவுகளை சரி கட்டி வருகிறார் இந்த விசித்திர மனிதர்.
மற்ற செய்திகள்