‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. ‘கொரோனாவுக்காக’ கட்டிய ஆஸ்பத்திரியை மூடப்போறோம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமாகியுள்ளதால் சிறப்பு மருத்துவமனையை மூடப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.

‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. ‘கொரோனாவுக்காக’ கட்டிய ஆஸ்பத்திரியை மூடப்போறோம்..!

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்துதான் முதல்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறித்த வீரியம் தெரிவதற்குள் சீனாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனா வைரஸால் சீனாவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வுகான் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 9 நாட்களில் சுமார் 1000 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை சீனா அரசு கட்டியது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்த வுகான் மாகாணத்தில் சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இந்த நிலையில் வுகான் நகரில் கட்டப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா நோயாளிகளுக்காக கட்டிய சிறப்பு மருத்துவமனை மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.