'காரணம் கூறாமல்' சீனா மேற்கொள்ளும் 'ரகசிய நடவடிக்கை...' 'எல்லைப் பிரச்னையைத் தொடர்ந்து...' 'அடுத்தடுத்த' நிகழ்வுகளால் 'பதற்றம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்கள் நாடு திரும்ப சீன அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
அண்மையில் லடாக் எல்லையில் சீனா ராணுவப் பயற்சி மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இதனால், இந்தியாவும் லடாக் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது.
இதனால், இந்தியா - சீனா இடையே புதிதாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவில் உள்ள சீனர்கள் நாடு திரும்புவதற்கு சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு தூதரக இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு திரும்ப விரும்புகிறவர்கள் வரும் புதன்கிழமைக்குள் பதிவு செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், விமானப் பயணச்சீட்டு கட்டணத்துடன், நாடு திரும்பியதும் 14 நாள்கள் தனிமைப்படுத்துவதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் எனக் அதில் கூறப்பட்டுள்ளது.
சீனர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை ஜூன் 2ஆம் தேதி முதல் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலிருந்து இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருக்கும் சீன மாணவர்கள், வணிகர்கள், சுற்றுலா பயணிகள், புத்த மத யாத்திரை மேற்கொண்டவர்கள் நாடு திரும்பலாம் எனக் கூறியுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு விமானத்தில் அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்