'1000 படுக்கைகள்' கொண்ட 'மருத்துவமனை'... 'ஏழே நாளில்' கட்டி முடித்து 'சீனா சாதனை'... 'வைரலாகும்' சாட்டிலைட் புகைப்படங்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 7 நாளில் 1,000 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை சீன அரசு கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது.

'1000 படுக்கைகள்' கொண்ட 'மருத்துவமனை'... 'ஏழே நாளில்' கட்டி முடித்து 'சீனா சாதனை'... 'வைரலாகும்' சாட்டிலைட் புகைப்படங்கள்...

சீனாவில் கோரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு தனியாக மருத்துவமனை ஒன்றை கட்ட தீர்மானித்தது. கடந்த 25ம் தேதி தொடங்கப்பட்ட இப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வந்தன. வேகமாக கட்டி முடிக்கப்படவேண்டும் என்பதற்காக இரவு பகலாக பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் சீன ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை சீனா கட்டி முடித்துள்ளது. 7 நாட்களில் இந்த மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டிமுடித்துள்ளது. நாளை முதல் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 1400 ராணுவ மருத்துவ அதிகாரிகளை பணியில் அமர்த்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் கட்டடம் கட்டப்பட்டது தொடர்பான  சாட்டிலைட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜனவரி 29,30,31 ஆகிய 3 நாட்களில் கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை அந்த புகைப்படங்கள் விளக்குகிறது. 3 நாட்களுக்கு முன்னர் காட்டுப்பகுதியாக இருந்த அப்பகுதி தற்போது பிரம்மாண்ட மருத்துவமனையாக உருவெடுத்துள்ள அதிசயத்தை இப்படங்கள் தெரிவிக்கின்றன.

CHINA, CORONA, GIANG HOSPITAL, SATELLITE, PICTURE