சீனாவில் நாய்க்குட்டி ஒன்றை ஆசையுடன் வளர்த்து வந்த குடும்பத்தினருக்கு 2 வருடங்கள் கழித்து உண்மை தெரிய வந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
செல்லப் பிராணிகள்
பொதுவாக மனிதர்களுக்கு செல்லப் பிராணிகள் மீது ஈர்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இன்று நேற்று அல்ல. பண்டைய காலத்திலேயே மக்கள் வளர்ப்பு பிராணிகளை தங்களது வீட்டில் வளர்த்து வந்ததாக சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக நாய்கள் வளர்ப்பின் மீது மக்களுக்கு எப்போதுமே பெரு விருப்பம் இருந்து வருகிறது. வீட்டில் ஒருவராகவே நாய்களை கருதுவோரும் உண்டு. இந்த சூழ்நிலையில் நாய் வளர்க்க ஆசைப்பட்ட சீனாவை சேர்ந்த குடும்பத்தினருக்கு 2 வருடம் கழித்து பெரும் அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
நாய்க்குட்டி
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சு யுன், 2016 ஆம் ஆண்டு விடுமுறையில் இருந்தபோது, திபெத்திய மாஸ்டிஃப் நாய்க்குட்டி என அதனை வாங்கியிருக்கிறார். அதற்கு ஆசையாக உணவு அளித்தும் வந்திருக்கிறார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல நாயின் உடல் பருமனும் கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. இரண்டு வருடங்களில் நாயின் எடை 250 பவுண்டுகளாக அதிகரித்திருக்கிறது. அதாவது சுமார் 114 கிலோ. இதனால் குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாய் இரண்டு கால்களில் நடந்தபோது குடும்பத்தில் இருந்த மொத்த பேரும் அதிர்ந்து போய்விட்டனர்.
அதிர்ச்சி
இதனையடுத்து அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அளித்திருக்கிறார். இதனையடுத்து சு யுன் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் அவருடைய நாயை கண்டதும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். காரணம் அது நாயே கிடையாது. மேலும் அது ஆசிய கருப்பு கரடி எனவும் இது மிகவும் அரியவகை இனம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து அந்த கரடியை அங்கிருந்து அழைத்துச் சென்று வனவிலங்குகள் பராமரிப்பு மையத்தில் சேர்த்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
சு யுன் வீட்டில் இருந்த கரடியின் எடை 400 பவுண்டுகள் (தோராயமாக 182 கிலோ) மற்றும் ஒரு மீட்டர் (3 அடி) உயரம் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், சீனாவை பொறுத்தவரையில் வனவிலங்குகளை வீட்டில் வளர்ப்பது குற்றம் எனவும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | "மெஸ்ஸி தான் பெஸ்ட்"... கூச்சலிட்ட சிறுவன்.. ரொனால்டோ கொடுத்த பதில்.. வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்