தொடர்ந்து எழுந்த 'குற்றச்சாட்டு'... வுஹானில் 'உண்மையான' பலி எண்ணிக்கை 'வெளியீடு'... முன்னர் 'தவறாக' கணக்கிட்டதாக 'ஒப்புக்கொண்ட' அரசு...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 1,290 உயிரிழப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எழுந்த 'குற்றச்சாட்டு'... வுஹானில் 'உண்மையான' பலி எண்ணிக்கை 'வெளியீடு'... முன்னர் 'தவறாக' கணக்கிட்டதாக 'ஒப்புக்கொண்ட' அரசு...

கொரோனா மையமான வுஹானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 1,290 உயிரிழப்புகள் தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆக உயர்ந்துள்ளது. முன்னர் இந்த உயிரிழப்புகளை கணக்கிட தவறிவிட்டதாக  சீனா தற்போது முதற்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வராமலேயே பலர் உயிரிழந்தது போன்ற காரணங்களால் இந்த உயிரிழப்புகள் முன்னர் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சீன அரசு கூறும் கொரோனா உயிரிழப்புகளை விட நிச்சயம் அங்கு உண்மையான எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கலாம் என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசின் சமூகவலைத்தளத்தில் வுஹானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 50% அதிகரித்து தற்போது கூடுதலாக 1,290 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 82,389 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 77,944 பேர் குணமடைந்துள்ளனர்.