'கொரோனா' படுத்துற பாட்டுல... இதயும் சேர்த்து 'நீங்க' அனுபவிக்கணும் பாத்துக்கோங்க... 'எச்சரிக்கும்' சீனா!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் காட்டி வரும் நிலையில் வைரசை வேண்டுமென்றே பரப்பியதாக அமெரிக்கா சீனா மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.

'கொரோனா' படுத்துற பாட்டுல... இதயும் சேர்த்து 'நீங்க' அனுபவிக்கணும் பாத்துக்கோங்க... 'எச்சரிக்கும்' சீனா!

இந்நிலையில், இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாக சீனாவை எதிர்க்க நினைத்தால் கொரோனா தொற்று நோய்க்கு இடையில் இந்தியா மிகப்பெரும் பொருளாதார பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சீனா கூறியுள்ளது.

இதுகுறித்து சீனா தரப்பில், 'இந்தியாவிலிருந்து கிடைக்கும் அதிக லாபத்தை சுரண்ட இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவாக சில குரல்கள் எழுந்துள்ளன. இத்தகைய குரல்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கட்டுப்படுத்தக்கூடாது. தற்போதைய சூழ்நிலையில், சீனாவுடனான தனது உறவுகளில் எந்தவொரு பிரச்சனையையும் கையாள்வதில் அமெரிக்காவை இந்தியா சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்துக் கொண்டால் அது சீனா - இந்தியாவுக்கு இடையிலான உறவை சிக்கலாக்கும் என தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சீனா - இந்தியா இடையேயுள்ள எல்லைப் பிரச்சனை குறித்து, 'இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரத்தில் மூன்றாம் நாடாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வது தேவையற்றது என்றும், எல்லைப் பிரச்சனையை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பேசி தீர்த்து கொள்ளும் திறன் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்