பாவம் தாலிபான்...! தயவு செஞ்சு 'அப்படி' மட்டும் பண்ணிடாதீங்க...! 'அவங்களுக்கு ஏற்கனவே ரொம்ப பிரஸர்...' - ஆதரவுக் குரலை 'ஜி-20' மாநாட்டில் பதிவு செய்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் (Talibans) ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆண்கள் மட்டும் இருக்கும் அமைச்சரவையை அமைத்துள்ளனர். ஆப்கானின் பிரதமராக முல்லா ஹசன் அகுந்த்தும், துணைப் பிரதமராகவும் முல்லா பரதார் என்பவாரும் பொறுப்பேற்றுள்ளனர்.
தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள தாலிபான்களுக்கு ஏகப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதோடு தாலிபான்கள் ஒரு அடிப்படைவாத மத தீவிரவாத அமைப்பு என்பதால் பல உலக நாடுகள் ஆப்கான் ஆட்சி குறித்து தங்கள் நிலைப்பாட்டை கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர்.
ஆனால், ஆப்கானின் அண்டைநாடான பாகிஸ்தான், மற்றும் நட்பு நாடான சீனா (China) போன்றவை தாலிபான்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வருகின்றது.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, 'தற்போது தாலிபான் அமைப்பு ஆப்கானில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. ஆப்கானின் அந்நியச் செலாவணி அந்நாட்டின் சொத்து. அது அவர்களுக்கே சேர வேண்டும்.
உலகநாடுகள் ஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் சர்வதேச நாடுகள் ஆப்கான் அரசை அங்கீகரிக்க வேண்டும்.
ஆப்கனிஸ்தானுக்கு சொந்தமான வெளிநாட்டு நிதியை முடக்குவதோ அல்லது அதனை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. ஆப்கானிஸ்தான் ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கிறது. ஆப்கான் மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகள் அவர்களின் நிதியை விடுவிக்க வேண்டும்.
அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்' என ஆதரவு குரலை சீனா கொடுத்துள்ளது.
மேலும், ரஷ்யாவும் ஆப்கானிஸ்தானின் அமைதி, வளத்திற்காக, பிராந்திய வளர்ச்சிக்கான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ஸ்புட்னிக் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்