'இப்படியும் கொரோனா பரவும்'... 'பீதியை கிளப்பிய சீனா'... 'உங்களுக்கு இது தான் வேலையா'?... கடுப்பான நிபுணர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறக்குமதி செய்யப்படும் உறைந்த பேக்கிஜிங் உணவுகள் மூலம் கொரோனா பரவுவதாகச் சீனா குற்றஞ்சாட்டி உள்ளது, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

'இப்படியும் கொரோனா பரவும்'... 'பீதியை கிளப்பிய சீனா'... 'உங்களுக்கு இது தான் வேலையா'?... கடுப்பான நிபுணர்கள்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.08 லட்சத்தைத் தாண்டி உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,308,487 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் கொரோனா வைரசை முற்றிலும் ஒழிக்க சீனா அரசு முயற்சித்து வரும் நிலையில் இறக்குமதி செய்யப்படும் உறைந்த பேக்கிஜிங் உணவுகள் மூலம் கொரோனா பரவுவதாகச் சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

ஆனால் இதை மறுத்துள்ள உலக சுகாதார நிறுவனம், இந்த  கோட்பாடு சர்வதேச சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு முரணானது. உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு  உணவு அல்லது உணவு பேக்கேஜிங்கிலிருந்துகொரோனா பரவுவது என்பது சாத்தியமில்லை" என்று கூறுகிறது. ஆனால் உணவு பேக்கேஜிங்கில் இருந்து கொரோனா வருவது சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாகவும் சீனா கூறுகிறது.

கடந்த ஐந்து மாதங்களில், இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த உணவுப் பொருட்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது.  ஈக்வடாரில் இருந்து வந்த இறால், ரஷ்யாவிலிருந்து வந்த ஸ்க்விட், நார்வே மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்த மீன்கள் மற்றும் பிரேசிலிலிருந்து வந்த மாட்டிறைச்சி மற்றும் கோழி இறக்கைகள் உள்ளிட்டவற்றில் கொரோனா வைரஸின் தடயங்களைக் கண்டுபிடித்ததாகச் சீனா தெரிவித்துள்ளது. .

ஆனால் இந்த குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ள நிபுணர்கள்,  சீனாவின் நியூக்ளிக் அமில சோதனைகள் இறந்த வைரஸின் மரபணு துண்டுகளை எடுக்கக்கூடும், அவை  தொற்றுநோயாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.

மற்ற செய்திகள்