'இதுல கூட வைரஸ் தொற்று இருக்கா'... 'அரண்டு போன சீனா'... இந்தியாவிலிருந்து வரும் மீன்களுக்கு தடை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

6 நிறுவன தயாரிப்புகளை இறக்குமதி செய்யச் சீனா தடைவிதித்துள்ளது.

'இதுல கூட வைரஸ் தொற்று இருக்கா'... 'அரண்டு போன சீனா'... இந்தியாவிலிருந்து வரும் மீன்களுக்கு தடை!

சீனாவில் முதன்முதலாக கொரேனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் உலக நாடுகளுக்குப் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிறது. இன்று வரை கொரோனாவின் ஆட்டம் முடியவில்லை. தற்போது இரண்டாவது அலை சற்று தணிய ஆரம்பித்துள்ள நிலையில், 3ம் அலை குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் அதனைத் தடுக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது.

China suspends import of frozen seafood from Indian firms

இந்நிலையில்  சீனா  கடந்த வருடத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உறைந்த கடல் உணவுகளைப் பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர்தான், நாட்டில் விற்பனைக்கு அனுமதி அளிக்கிறது. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு கடல் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உறைந்த கடல் உணவைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனங்களின் பாக்கெட்டுகளை சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாக்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஒருவாரத்திற்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்து கடல் உணவை இறக்குமதி செய்யத் தடைவிதித்துள்ளது.

மற்ற செய்திகள்