'கொரோனா முதல்முதலா உருவானதே இந்தியாவுல தானா???'... 'பகீர் கதையைக் கூறி'... 'பரபரப்பை கிளப்பியுள்ள சீன ஆய்வாளர்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் சீன ஆய்வாளர்கள் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னரே இத்தாலி உட்பட உலகின் பிற பகுதிகளில் பரவியதாக சீன அரசாங்கம் சமீபத்தில் கூறிய சூழலில், தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து உலகிற்கு பரவியதாக சீன விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி புது கதையைக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு, "கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 கோடையில் தோன்றியிருக்கலாம். இந்த கொரோனா வைரஸ் அசுத்தம் செய்யப்பட்ட நீர் மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குள் நுழைந்து, பின் இந்தியாவிலிருந்து வுஹானை அடைந்து அங்கு அது அடையாளம் காணப்பட்டிருக்கலாம்" எனக் கூறியுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸின் மூலத்தை தீர்மானிக்க சீன குழு பைலோஜெனடிக் பகுப்பாய்வை கொரோனா பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றி பேசியுள்ள சீன விஞ்ஞானிகள், "வுஹானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு உண்மையான வைரஸ் அல்ல. விசாரணையில் பங்களாதேஷ், அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷ்யா, செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷில் பலவீனமான பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால், அங்கு முதலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்" என வாதிட்டுள்ளனர். அத்துடன் இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக இந்த நோய் பல மாதங்களாக கண்டறியப்படாமல் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சீன விஞ்ஞானிகளின் இந்த கூற்று மற்ற விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டேவிட் ராபர்ட்சன், "சீன ஆராய்ச்சி அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்த நம் புரிதலை அது சிறிதும் மேம்படுத்தவில்லை" எனக் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் வுஹானில் தோன்றியதில்லை என நிரூபிக்க சீனா மற்ற நாடுகள் பெயரை இழுப்பது இது முதல் முறை அல்ல என்பதும், தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்க முயற்சித்து WHO தனது விசாரணைக் குழுவை அங்கு அனுப்பியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்