'நீங்க ரொம்ப யோக்கியமோ'?... 'ஆப்கான் மக்களை பார்த்து ஏன் நீலிக்கண்ணீர் வடிக்குறீங்க'... சீனாவின் பரபரப்பு குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் மக்களின் இந்நிலைக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் எனச் சீனா பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்திற்கான சீனத் தூதர் சென் சூ, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலிடம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் படைகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏறக்குறைய 20 வருட இராணுவ ஆட்சியை அங்கு நடத்திவிட்டு எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணாமல் தற்போது அனுதாபப்பட்டு என்ற பிரயோசனமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் மற்ற நாடுகளில் இராணுவத் தலையீடுகளை மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது'' எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாலிபான்கள் ஆட்சி அமைக்கச் சீனா உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும், தாலிபான்களோடு நட்புறவோடு செயல்படச் சீனா விருப்பமாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்