“இதான் அந்த கொரோனா வைரஸ்!”.. “மைக்ரோஸ்கோப்பிக் படங்களை வெளியிட்ட சீனா!”... கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கியதால் ஆசியா முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதுவரை இந்த வைரஸினால் 81 பேர் மரணம் அடைந்துவிட்டதாகவும், 2800 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிகிறது.

“இதான் அந்த கொரோனா வைரஸ்!”.. “மைக்ரோஸ்கோப்பிக் படங்களை வெளியிட்ட சீனா!”... கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!

அதன் பிறகு இந்தியாவிலும் நுழைந்துவிட்ட இந்த நோயை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சீன அரசும் இந்திய அரசும் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில்

சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை (மைக்ரோஸ்கோப்பிக் புகைப்படங்கள்) நேற்று வெளியிட்டனர்.

இந்நிலையில் உலக சுகாதார தலைவர்கள் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு இந்த நோய் குறித்த பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளனர். இதனிடையே வுஹான் நகரத்துக்குள் மட்டும் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவல் வெளியானதை அடுத்து, வுஹானுக்குள் மக்கள் வருவதும் வெளியில் செல்வதும் தடை செய்யப்படுவதற்கு முன்பாக அங்கிருந்து சுமார் 50 லட்சம் பேர் வெளியேறியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வசிக்கும் வுஹானைச் சேர்ந்தவர்களை வெளியேற்றவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஜனவரி 30ம் தேதியோடு முடியவிருந்த வசந்தகால விடுமுறை நீட்டிக்கபட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டம் கூட்டமாக முகமூடி அணிந்துகொண்டு ரயில் நிலையங்களில் போக்குவரத்துக்காக காத்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

CORONAVIRUS, CHINA, ASIA