“எங்க பிரச்சனைய நாங்க தீத்துக்குறோம் தலீவா!”.. 'மத்தியஸ்தரம்' செய்ய முன்வந்த டிரம்ப்.. 'சீனா' கொடுத்த பதிலடி!
முகப்பு > செய்திகள் > உலகம்லடாக் எல்லையில் உருவாகியுள்ள இந்தியா - சீனா பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனா இடையிலான மத்தியஸ்தரத்தை செய்து வைக்க அமெரிக்கா தயார் என்று அந்த நாட்டு அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "சீனாவுடனான பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் விதமாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம்" என்று கூறினார். இதனிடையே, “இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி மூட் அவுட்டில் இருக்கிறார்” என்று டிரம்ப் அறிவித்திருந்த தகவலையும் இந்தியாவின் தரப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை உரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் முறையாக தீர்க்கும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிவிப்பில், “இந்த விஷயத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை. சீனா மற்றும் இந்தியாவின் எல்லைப் பகுதியில் தற்போதைய நிலைமை இயல்பானதாகவும் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. சீனா மற்றும் இந்தியா நாடுகளும் எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு சேனல்களை திறம்படக் கொண்டு செயல்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்த நிலையில் சீனா இத்தகைய பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்