"இப்ப என்ன? இதானே வேணும்"!.. 'கொரோனாவால்' பாதிக்கப்பட்ட 'முதல் நோயாளி' தொடங்கி எல்லாத்தையும் 'போட்டு' உடைத்த 'சீனா'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உருவானதற்குக் காரணமாக சீனாவை உலக நாடுகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், முதல் முதலில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளி உள்ளிட்ட முக்கிய விபரங்களையும் உலக நாடுகள் தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நீண்ட விளக்கத்தையும் சீனா வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வூஹான் மருத்துவமனையில் கண்டறியப்பட்டார். இதனையடுத்து, அந்த மருத்துவர்கள்தான் இந்த நோய்த்தொற்று பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு மருத்துவ வல்லுநர்களிடம் கோரியதாகவும், முதலில் இந்த வைரஸ் நிமோனியா என்றுதான் கணித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் சீனாவின் மற்றொரு நுரையீரல் வல்லுநர் ஹாங் நான்ஷன் கூறும்போது, ஜனவரி 19-ம் தேதிக்கு முன்னதாக, சீனாவின் புகழ்பெற்ற நுரையீரல் வல்லுநர் வாங் குவாங்பா அளித்த அறிக்கையில் இந்த வைரஸ் மனிதர்கள் மூலம் பரவுவதற்கான ஆய்வுத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னர் ஜனவரி 20-ஆம் தேதி இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவும் என உறுதிசெய்யப்பட்டது. ஜனவரி 14-ம் தேதி வுஹான் நகரம் கொரோனாவை எதிர்கொள்ளத் தயாரானது.
அதன் பின்னர்தான் உலக சுகாதார மையம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக மாறக் கூடிய அபாயத்தை அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதற்குள் வுஹான் நகரில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறியதாகவும், பின்னர் தேசிய அளவில் வைரஸை கட்டுப்படுத்தும் செயல்திட்டம் வகுக்கப்பட்டதாகவும் ஹாங் நான்ஷன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்