"இது சரியில்ல".. கனடா பிரதமரிடம் அச்சுறுத்தும் தொனியில் பேசினரா சீன அதிபர்? வைரல் வீடியோ குறித்து சீனா பரபரப்பு விளக்கம்.! G20 Summit

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

Beijing: இந்தோனேசியாவில் ஜி 20 உச்சி மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. இதில்தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசிக் கொண்டிருந்தபோது கோபித்துக் கொண்டதாக சொல்லி வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.

"இது சரியில்ல".. கனடா பிரதமரிடம் அச்சுறுத்தும் தொனியில் பேசினரா சீன அதிபர்? வைரல் வீடியோ குறித்து சீனா பரபரப்பு விளக்கம்.! G20 Summit

Also Read | "காசியும் தமிழகமும் ஒன்றுதான்".. தமிழில் ட்வீட் செய்த யோகி ஆதித்யநாத்.. பின்னணி என்ன?

இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கிய ஜி20 மாநாடு கூட்டமைப்பு நவ 15, 16 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த உச்சி மாநாடு கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்று நடத்தியது. அதன்படி இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரேசில், தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, துருக்கி, சவுதி அரேபியா ஆகிய 19 நாடுகளுடன் ஜீ 20 கூட்டமைப்பு உறுப்பினர்களாக ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்திருக்கின்றன.

இந்த நிலையில் ஜி 20 மாநாட்டின் போது கேமராவுக்கு முன்னிலையில் சீன அதிபரும், கனடா பிரதமரும் பேசிக் கொண்டிருகந்தனர். அதன் பின்னர் இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்,  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசிக்கொண்டிருந்த போது கோபித்துக் கொண்டதாக பரவக்கூடிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் சீனா அதிபர் ஜி ஜின்பிங், “இரு நாடுகளுக்கு இடையே நடக்கக்கூடிய விவாதங்கள் பற்றிய அனைத்து விபரங்களும் செய்தித்தாளர்களுக்கு கசிந்து இருப்பது என்பது சரியானதாக இல்லை. உங்களுடைய தரப்பில் நேர்மை இல்லாததாகவே படுகிறது.” என்று கூறுகிறார்.

இதற்கு பதில் அளித்த ஜஸ்டின் ட்ரூடோ, “கனடாவில் நாங்கள் வெளிப்படை தன்மையே எப்போதும் விரும்புகிறோம். அதையே நாங்கள் நம்பவும் செய்கிறோம். தொடர்ந்து நாங்கள் அதை செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார். இதை கேட்டதும் ஜி ஜின்பிங் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். இந்த வீடியோ ஊடகங்களில் பதிவாகி வெகு வேகமாக பரவி வருகிறது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசுவதாக சொல்லப்படக் கூடிய தகவல்களை கனடாவின் CTV ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோவில் காண முடியும்.

China On Xi Jinping Justin Trudeau Viral Video G20 Summit

இந்நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Mao Ning,

“இது ஒரு நார்மலான பேச்சுதான். ஒரு உலக மாநாட்டில் சந்தித்துக் கொள்ளும் இருநாட்டு முக்கிய தலைவர்களும் செய்துகொள்ளக்கூடிய மிக இயல்பான உரையாடலே இது. இதில் சமத்துவமும், மரியாதை நிமித்தமும் இருப்பதே முக்கியம். அதே பரஸ்பர மரியாதையுடனே இருவரும் பேசியுள்ளனர். மாறாக இதில் கனடா மீது எவ்வித குற்றச்சாட்டையோ, பழியோ போடும் நோக்கில் அல்லது அச்சுறுத்தும் நோக்கில் அந்த கருத்தை ஜி ஜின்பிங் சொல்லவில்லை” என தெரிவித்துள்ளார்.

 

Also Read | "பூமியை காப்பாத்த செவ்வாய் கிரகத்துல இருந்து வந்திருக்கேன்".. உலகத்தையே அதிர வைக்கும் சிறுவன்.. பரபர பின்னணி..!

G20 SUMMIT, PM MODI, XI JINPING, JUSTIN TRUDEAU, CHINA CANADA, CANADA, BEIJING, MAO NING

மற்ற செய்திகள்