Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top

நிலநடுக்கத்தில் சிக்கி.. "17 நாளா ஆளையே காணோம்".. இறந்ததாக கருதப்பட்ட நபர்.. உயிருடன் திரும்பிய அதிசயம்.. "எப்படிங்க பொழச்சாரு??"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தில் சிக்கி.. "17 நாளா ஆளையே காணோம்".. இறந்ததாக கருதப்பட்ட நபர்.. உயிருடன் திரும்பிய அதிசயம்.. "எப்படிங்க பொழச்சாரு??"

Also Read | சென்னை விமான நிலையம் வந்த பயணி.. "15 வருசமா இவரை தேடிட்டு இருக்காங்களாம்".. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு!!

இதன் காரணமாக, பல பகுதிகள் சேதமடைந்த நிலையில், கடும் பாதிப்புகளும் ஏற்பட்டது.

அது மட்டுமில்லாமல், இந்த நிலநடுக்கம் காரணமாக, சுமார் 93 பேர் வரை உயிரிழந்ததாகவும், 100 க்கும் மேற்பட்டோர் வரை காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆன நிலையில், இதில் சிக்கிய தொழிலாளி ஒருவர் குறித்த பரபரப்பு தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில், நிலநடுக்கம் ஏற்பட்ட போது நீர்மின் நிலைய ஊழியர் Gan Yu என்ற நபர், தனது சக பணியாளர் ஒருவருடன் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திடீரென நிலநடுக்கம் உருவாகவே, காயமடைந்த சக ஊழியர்களுக்கு முதலுதவி வழங்கவும், ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், Gan மற்றும் சக பணியாளர் ஒருவர் அங்கேயே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

china man missing for 17 days after earthquake found alive

தொடர்ந்து, மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு நாளுக்கு மேல் உணவு எதுவும் இல்லாமல் Gan மற்றும் அவரது சக ஊழியர் இருந்துள்ளனர். இதன் பின்னர், சுமார் 12 மைல்கள் அவர்கள் இருவரும் பயணம் செய்த நிலையில், குறுகிய பார்வை திறன் கொண்ட Gan, நிலநடுக்கத்திற்கு மத்தியில் தனது கண்ணாடியையும் தொலைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், செங்குத்தான நிலப்பரப்பை கடக்கவும் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் பிரிய திட்டம் போட்ட நிலையில், சில காட்டு பழங்கள் மற்றும் மூங்கில் தளிர்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதற்காக Gan-இடம் சக ஊழியர் கொடுத்து சென்றுள்ளார். தொடர்ந்து, மறுநாளே மீட்புக் குழுவினர் Gan-ஐ கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அவர்கள் மீண்டும் அந்த இடத்திற்கு Gan-ஐ தேடி வரும் போது, அவர் காணாமல் போயுள்ளார்.

china man missing for 17 days after earthquake found alive

மேலும், அவரது ஆடைகள் மற்றும் கால் தடங்களை வைத்து, தாழ்வெப்ப நிலை காரணமாக அவர் இறந்து போயிருப்பார் என்றும் மீட்புக்குழுவினர் கருதி உள்ளனர். அப்போது தான், மலையின் அடிவார பகுதி குறித்து நன்கு தெரிந்த உள்ளூர் கிராமவாசி ஒருவர், மரங்களுக்கு அடியில் காயங்களுடன் Gan கிடப்பதை கண்டுள்ளனர்.

தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். அவரது உடலின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சை அளிக்கப்படும் வருகிறது. மிகவும் மோசமான ஒரு சூழலில் இறந்திருப்பார் என கருதப்பட்ட நபர், 17 நாட்கள் கழித்து உயிருடன் திரும்பியுள்ள சம்பவம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | ஐபிஎல் 2023 : ஜடேஜா விவகாரத்தில் சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு??.. வெளியான தகவல்!!

CHINA, MAN MISSING, EARTHQUAKE

மற்ற செய்திகள்