போலீசுக்கு பயந்து 14 வருஷம் காட்டில் வாழ்ந்த நபர்.. மனம் மாறி போலீசில் சரண் அடைந்த சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகத்தை சுற்றி ஏராளமான வினோதம் நிறைந்த செய்திகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. அவற்றுள் பல விஷயங்கள் அதிகம் தெரியாமல் அப்படியே கடந்து போகும் பட்சத்தில் சில விஷயங்கள் இணையவாசிகள் கவனம் பெற்று பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக கூட மாறும்.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில், தற்போதும் அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான், இணையத்தில் அதிகம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை சம்பவம்
சீனா நாட்டை சேர்ந்தவர் லூயி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, கேஸ் ஸ்டேஷன் ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து இவரும் கூட்டாளிகளும் சுமார் 1,859 ரூபாய் வரை திருடி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல், இந்த திருட்டு சம்பவத்தின் காரணமாக கடுமையாக மன உளைச்சலுக்கும் அவர் ஆளானதாகவும் சொல்லப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners
அதே போல, போலீசாரை நினைத்தும் பயந்துள்ள லூயி, பரபரப்பான முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து சிக்காமல் திருட்டு வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என எண்ணிய லூயி, காட்டுப் பகுதிக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் உட்பகுதியில் தலைமறைவாகி உள்ளார். அங்கே அமைந்துள்ள குகை ஒன்றிலும் அவர் தஞ்சம் புகுந்துள்ளார். அது மட்டுமில்லாமல், காட்டில் வாழ்ந்து வந்த லூயிக்கு தொடர்ந்து பயம் விலகாமல் இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
காட்டிற்குள் 14 வருடங்கள்
மேலும் அங்கே சில நாய்களை தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த லூயி, அருகே உள்ள கிராமத்தில் இருந்து உணவு பொருட்களை திருடி அதன் மூலம் நாட்களை கழித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வப்போது குடுமபத்தினரை பார்த்து வந்தாலும் அவர்களுக்கும் தான் தங்கும் இடத்தை சொல்லாமல் வைத்துள்ளார் லூயி. ஆனால், அதே வேளையில் மொத்தம் 14 ஆண்டுகள் காட்டிற்குள் குகையில் இருந்த லூயி, தனது தந்தையின் மரணம், மகனின் திருமணம், பேரக்குழந்தையின் பிறப்பு உள்ளிட்ட தருணங்களில் அருகே இல்லாததால் நிம்மதியை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மனம் மாறிய லூயி
இதன் காரணமாக, அதே குகையில் சுமார் 14 ஆண்டுகள் வாழ்ந்து வந்த லூயி, இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது மனம் மாறி இறுதியாக அந்த குகையை விட்டு வெளியேறி, நேராக போலீசாரிடம் சரண் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இனி சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என லூயி முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே வேளையில், 2009 ஆம் ஆண்டு லூயி ஈடுபட்ட கொள்ளை சம்பவத்திற்காக அவருக்கு சில ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners
14 ஆண்டுகள் காட்டில் அமைந்துள்ள குகை ஒன்றில் போலீசுக்கு அஞ்சி வாழ்ந்து வந்த நபர் தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்