கொரோனாவை 'தடுக்க' உதவுறோம்... ஆனா 'அமெரிக்கா' மாதிரி நீங்களும் ... இந்தியாவுக்கு 'ரெக்வஸ்ட்' விடுத்த சீனா... எதுக்குன்னு பாருங்க?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உதவி செய்வதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார்.

கொரோனாவை 'தடுக்க' உதவுறோம்... ஆனா 'அமெரிக்கா' மாதிரி நீங்களும் ... இந்தியாவுக்கு 'ரெக்வஸ்ட்' விடுத்த சீனா... எதுக்குன்னு பாருங்க?

சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றியதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சீன அரசை சீண்டி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். மேலும் சீன வைரஸ் என்றும் கொரோனா வைரஸை அவர் அழைத்து வருகிறார். இதை பலமுறை சீனா கண்டித்தும் டிரம்ப் கேட்பதாக இல்லை. இது சீன அரசை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை போனில் தொடர்பு கொண்டு இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும் இதை சீன வைரஸ் என இந்தியா சொல்லக்கூடாது என்றும், அமெரிக்கா போல இந்தியா குறுகிய மனப்பான்மை கொண்ட நாடு அல்ல என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

பதிலுக்கு ஜெய்சங்கர் இந்தியா ஒரு போதும் கொரோனாவை சீன வைரஸ் என்று குறிப்பிடாது என உறுதி அளித்துள்ளார். கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது வேண்டுமானால் சீனாவில் இருக்கலாம் ஆனால் அது சீன வைரஸ் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்ற பிரச்சாரத்தை சீன அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.