“எல்லாம் முடிஞ்சுதுனு பாத்தா.. திரும்பவும் மொதல்ல இருந்தா?”.. மீண்டும் சீனாவில் வெளியான ‘கிடுகிடுக்க’ வைக்கும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை தொற்றுக்குள் ஆழ்த்தி வருகிறது.
உலகின் 15 நாட்களுக்கு மேல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பெரிய மனித இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் பண்ணியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பல தடுப்பு முறைகளையும் நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி இந்த நோய் பின்னர் அமெரிக்கா, இந்தியா பிரேசில், ரஷ்யா மற்றும் ஆசிய நாடுகள் முழுவதும் பரவியது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7.67 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 2.15 கோடியை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.43 கோடியை தாண்டியுள்ளது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சீனாவில் கொரோனா வைரஸ் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 57 பேர் பாதிப்புகளில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதனால் சீனாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 634 பேர் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.
கொத்துக்கொத்தாக சீனாவில் மக்களைக் கொன்று குவித்தது கொரோனா. தற்போது மீண்டும் அப்படி நடந்து விடுமோ என்கிற அச்சம் அந்நாட்டு மக்களிடையே நிலவி வருவதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்