‘கொரோனா ஆபத்தை அறிந்து இருந்தும்’... ‘சொந்த மக்களுக்கே எச்சரிக்காமல்’... ‘6 நாட்கள் மறைத்த சீனா’... 'வெளியான அதிர்ச்சி தகவல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸிலிருந்து பெருந்தொற்றுநோயை எதிர்கொள்ள நேரிடும் என்று சீன உயர் அதிகாரிகள் ரகசியமாக உறுதி செய்த பிறகும், அத்தகவலை வெளியிட்டு மக்களை எச்சரிக்காமல், அடுத்த ஆறு நாட்களும் சீனா அமைதி காத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கொரோனா ஆபத்தை அறிந்து இருந்தும்’... ‘சொந்த மக்களுக்கே எச்சரிக்காமல்’... ‘6 நாட்கள் மறைத்த சீனா’... 'வெளியான அதிர்ச்சி தகவல்'!

கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி, கொரோனா வைரஸ், எதிர்பார்த்ததை விட மிகப்பெரியது என சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் அத்தகவல் மக்களுக்கு வெளியிடப்படப்படவில்லை. அந்தநேரத்தில் கொரோனா நோயின் மையப்பகுதியான வூஹான் நகரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதாவது சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற நாடுகளுக்கும் பயணமும் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதன்பிறகு சுமார் கொரோனா கண்டுப்பிடித்த 6 நாட்கள் கழித்தே, ஜனவரி 20 அன்று சீன அதிபர் ஜி ஜிங் பிங், பொது மக்களை கொரோனா குறித்து எச்சரித்துள்ளார். அவர் எச்சரிப்பதற்கு முன்பாகவே, 3 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவிவிட்டது என அரசு ஆவணங்களின் தகவல்களை பெற்று அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தொற்று ஏற்பட்டவுடன், அதாவது 6 நாட்கள் முன்னதாக சீனா நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

மேலும் மிகக் குறைவான நோயாளிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதுமானதாக இருந்திருக்கும் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணரான சூ பெங் ழாங் (Zuo feng zhang) கூறியுள்ளார். ஜனவரி முதல் வாரமே வழக்கத்திற்கு மாறாக வூஹான் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் அதிக நோயாளிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனை உள்ளூர் சுகாதார துறையோ, தேசிய துறையும் அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி 2-ம் தேதி நோய் குறித்து பேசிய 8 மருத்துவர்கள் வதந்தி பரப்பியதாக தண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தகவல்கள் மீதான சீனாவின் கடும் கட்டுப்பாடு, அதிகாரத்துவ தடைகள், கெட்ட செய்திகளை அனுப்ப இருக்கும் தயக்கம், மக்கள் மனதில் கொரோனா குறித்த அதிபயங்கர விளைவை ஏற்படுத்த வேண்டாம் என்ற எண்ணம் மற்றும் கொரோனா மனிதனுக்கு பரவுதற்கான ஆதாரங்கள் இல்லாததால், கொரோனா தொற்றை காலதாமதமாக அறிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.