“என்ன ஆனாங்கனே தெரியல.. உண்மைய சொல்லியிருந்தா எனக்கும் இதான் நடந்திருக்கும்!”.. ‘மிரளவைக்கும்’ ரகசியங்கள்.. போட்டு உடைத்த சீன பெண் விஞ்ஞானி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் 1.26 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயிரிழப்பை பொருத்தவரை 5 லட்சத்தைக் கடந்துவிட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

“என்ன ஆனாங்கனே தெரியல.. உண்மைய சொல்லியிருந்தா எனக்கும் இதான் நடந்திருக்கும்!”.. ‘மிரளவைக்கும்’ ரகசியங்கள்.. போட்டு உடைத்த சீன பெண் விஞ்ஞானி!

இந்த நிலையில், சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர், கொரோனா பற்றிய தகவல்கள் சீன அரசுக்கு முன்னரே தெரியும் என்று தெரிவித்து, பகீர் கிளப்பியுள்ளார்.  ஹாங்காங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான் (Li-Meng Yan) என்கிற பெண் விஞ்ஞானிதான் ஃபாக்ஸ் நியூஸூக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள லி மெங் தான் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வெளியிடாமல்,  பேசியதுடன், “கொரோனா பரவல் தொடர்பான தகவலை உரிய நேரத்தில் உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் தெரிவித்திருக்க வேண்டிய சீனா, தெரிந்தே மௌனம் காத்ததாக நினைக்கிறேன். வைரலாஜி துறையின் மேற்பார்வையாளர்கள், இவ்வைரஸ் தொடர்பான எங்களது ஆய்வை புறக்கணித்ததோடு, இது தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்கவும் அந்நாட்டு அரசு மறுத்தது. அதுமட்டுமல்லாமல் இவ்வைரஸ் பற்றி அப்போதே வெளிப்படையாக பேசிய பல மூத்த விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் பிறகு மௌனம் காத்ததையும், பிறகு அவர்கள் காணாமலே போனதையும் உணர முடிகிறது.

நானும் அங்கிருந்திருந்தால், என்னையும் சிறை வைத்திருப்பார்கள் அல்லது நான் காணாமல் போயிருப்பேன். ஆனால் இந்த உண்மைய வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, ஏப்ரல் 28-ம் தேதி கேத்தே பசிபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்