Annaathae others us

டைம் 'வேஸ்ட்' பண்ற ஒவ்வொரு 'நொடியும்' ஆபத்து...! 'ப்ளீஸ், ஏதாவது உடனே பண்ணுங்க...' 'இவங்கள' நியாபகம் இருக்கா...? - தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பரவலை சீனா கையாண்ட விதம் குறித்து வீடியோ வெளியிட்ட பெண் பத்திரிக்கையாளர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டைம் 'வேஸ்ட்' பண்ற ஒவ்வொரு 'நொடியும்' ஆபத்து...! 'ப்ளீஸ், ஏதாவது உடனே பண்ணுங்க...' 'இவங்கள' நியாபகம் இருக்கா...? - தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்...!

கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவியது. இந்த கொரோனா வைரஸ் பரவலை சீன அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து 38 வயதான முன்னாள் பெண் பத்திரிக்கையாளர் சாங் சான் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

china journalist zhang zhan jailed in critical situation

அந்த வீடியோவில் சீன அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களை துன்புறுத்தியதாகவும், அவர்கள் மக்களை கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த வீடியோ வெளிவந்த சில நாட்களிலேயே சாங் சான் சீன மக்களுக்கும் அரசிற்கும் இடையே பிரச்ச்னையை தூண்டுவகதாகக் கூறி கைது செய்யப்பட்டு நான்காண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

china journalist zhang zhan jailed in critical situation

சீனாவில் பொதுவாக அரசுக்கு எதிராக மாற்று கருத்து கூறுபவர்கள் இந்த பிரிவின் கீழ்தான் கைது செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சான் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து கூட வரலாம் என தெரியவந்துள்ளது.

சான்னின் இந்நிலை குறித்து அம்னெஸ்டி பரப்புரையாளர் க்வென் லீ கூறும் போது, 'உண்ணாவிரதத்தை அவர் உடனடியாக கைவிட வேண்டும் எனில், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சாங்கின் கைது மனித உரிமைக்கு எதிரான வெட்கக்கேடான தாக்குதல்' எனக் கூறியுள்ளார்.

CORONAVIRUS, CHINA, JOURNALIST, ZHANG ZHAN

மற்ற செய்திகள்