'எங்க கிட்ட பக்கா ஆதாரம் இருக்கு'... 'இங்க இருந்து தான் வைரஸ் பரவியது'... அமெரிக்கா பகீர் குற்றசாட்டு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.95 கோடியைத் தாண்டியுள்ளது.

'எங்க கிட்ட பக்கா ஆதாரம் இருக்கு'... 'இங்க இருந்து தான் வைரஸ் பரவியது'... அமெரிக்கா பகீர் குற்றசாட்டு!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதோடு மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை தற்போது விடப்பட்டு வருகிறது.

China has been denying that a genetically modified coronavirus leaked

இந்நிலையில் அமெரிக்கக் குடியரசு கட்சியின் பார்லி., வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் , கொரோனா வைரஸ் சீனாவின் உகான் விலங்குகள் சந்தையிலிருந்து பரவவில்லை அது, உகான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூடத்தில் மனிதரைத் தாக்கும் வகையில் கொரோனா வைரசை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்துள்ளன. இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸ், 2019, செப்டம்பர் 12க்கு முன்பாகவே, உகான் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளன. உகான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளைப் பராமரிக்கும் பிரிவைச் சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது.

China has been denying that a genetically modified coronavirus leaked

இதற்காக, 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம் சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஆய்வகம் செயல்படத் துவங்கி இரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்