'தடுப்பூசி விவகாரத்தில்... புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்'... மக்களிடம் 'ரகசிய' ஒப்பந்தம்?... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி!!!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு மக்களிடம் பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'தடுப்பூசி விவகாரத்தில்... புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்'... மக்களிடம் 'ரகசிய' ஒப்பந்தம்?... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி!!!'...

சீனாவின் வுஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக சீனாவில் 11 கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அதில் 3 தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளன.

China Gives Unproven Corona Vaccines To Public With Secrecy Agreement

கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வரும் பல நாடுகளிலும் தாமாக முன்வந்து மக்கள் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சீனாவில் குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக தடுப்பூசி பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் இந்தப் பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் இந்த பரிசோதனை குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

China Gives Unproven Corona Vaccines To Public With Secrecy Agreement

இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ள நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள சீன தேசிய சுகாதார கமிஷனின் உயரதிகாரி ஒருவர், "உலக சுகாதார அமைப்பு ஜூலை மாதத்தில் வழங்கிய ஒப்புதலின்படியே, பரிசோதனைகள் நடக்கின்றன. எந்த விதிமீறலும் இல்லை" எனக் கூறியுள்ளார். அதேவேளையில் இதுபற்றி பேசியுள்ள மருத்துவ நிபுணர்கள், "பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் கட்டாயப்படுத்தி, ரகசியமாக அதுவும் வெளியே இதுகுறித்து பேசக்கூடாது என மிரட்டப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்