'இத தொட்டாலே சிக்கல் தான்...' 'சீனால மறுபடியும் கொரோனா...' 'ஆனா இதுல வர்றது முதல் தடவ...' - சீன மக்கள் மீண்டும் அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் மீண்டும் உணவு பொட்டலங்களின் பேக்கேஜிங்கில் பரவிய கொரோனா வைரசால் சீனமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'இத தொட்டாலே சிக்கல் தான்...' 'சீனால மறுபடியும் கொரோனா...' 'ஆனா இதுல வர்றது முதல் தடவ...' - சீன மக்கள் மீண்டும் அதிர்ச்சி...!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுநாள் வரை மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் உலகையே பெரும் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது என அந்நாட்டின் அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சீனாவின் கிங்டாவோ நகரில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் பேக்கேஜிங்கில் கொரோனா வைரஸ் வாழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உணவுப் பொட்டலங்களின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டது இதுவே முதன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சிடிசி என்கிற சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த உணவுப்பொருள் எந்த நாட்டிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த பேக்கேஜிங்கை தொடுகிறவர்களை கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்