'400 கோடி மாஸ்க்குள்...' '38 லட்சம் பாதுகாப்பு உடைகள்...' '16 ஆயிரம் வென்டிலேட்டர்கள்...' '25 லட்சம் டெஸ்ட் கிட்கள்...' '140 கோடி டாலர் வர்த்தகம்...' 'ஏறுமுகத்தில் சீன பொருளாதாரம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 50 நாடுகளுக்கு சுமார் 400 கோடி மாஸ்குகளை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. மேலும், வெண்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள், கோவிட் 19 சோதனை கிட்கள் என பல மில்லியன் டாலர் மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

'400 கோடி மாஸ்க்குள்...' '38 லட்சம் பாதுகாப்பு உடைகள்...' '16 ஆயிரம் வென்டிலேட்டர்கள்...' '25 லட்சம் டெஸ்ட் கிட்கள்...' '140 கோடி டாலர் வர்த்தகம்...' 'ஏறுமுகத்தில் சீன பொருளாதாரம்...'

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் பெருகி வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வளர்ந்த நாடுகளே திணறி வருகின்றன. இதனால் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள 50 நாடுகளுக்கு சீனா மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து 3.86 பில்லியன் முகமூடிகள் 37.5 மில்லியன் பாதுகாப்பு உடைகள், 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள், 2.54 மில்லியன் கோவிட் 19 சோதனை கிட்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் மருத்துவ பொருட்கள் ஏற்றுமதி 1.4 பில்லியன் டாலராக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், நெதர்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், குரோஷியா, துருக்கி , மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மருத்துவ பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்துள்ளன.