'கொரோனாவ விட கொடிய நோய் இந்த நாட்டுல இருக்கு...' 'இதைவிட மூணு மடங்கு ஸ்பீடா பரவுது...' - சீனா கடும் எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம் எச்சரித்துள்ளது.
பெயரிடப்படாத அந்த நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மட்டும் 628 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்போடு ஒப்பிடும்போது இந்த நிமோனியாவால் உயிரிழப்பு அதிகம் என சீனா கவலை தெரிவித்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள சீனர்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனத் தூதரகத்தின் எச்சரிக்கையை உறுதி செய்யும் விதத்தில்,இந்த நிமோனியா தொற்று கொரோனாவை விட மூன்று மடங்கு வேகமாக பரவி வருவதாக கஜகஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நிமோனியா என்ற பெயரிலேயே புதிய தொற்றை அந்நாட்டு அமைச்சகம் அழைக்கிறது. தலைநகர் நூர் சுல்தானில் நாள் ஒன்றுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 300 பேருக்கு பெயரிடப்படாத நிமோனியா தொற்று உறுதி செய்யப்படுவது.
கொ-ரோனா பரவலின் இரண்டாம் அலையை எதிர்நோக்கி உள்ள கஜகஸ்தானில் நிமோனியாவும் பரவுவது இரட்டைத் தாக்குதலாக அமையும் என அதிபர் கவலை தெரிவித்துள்ளார். ஆனாலும் இது எந்த வகை நிமோனியா என கஜகஸ்தான் அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. உலக சுகாதார நிறுவனமும் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்