'ஆசனவாய் வழியாக கொரோனா டெஸ்ட்'... 'என்னங்க சொல்றீங்க, அதிர்ச்சியான நெட்டிசன்கள்'... இப்படி தான் டெஸ்டிங் இருக்கும்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா தொற்றை கண்டறிய ஆசனவாய் மாதிரிகளை அரசு சேகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆசன வாயில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிய உலகம் முழுக்க பரவலாக பிசிஆர் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. இதுபோக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் கொரோனா பரிசோதனை கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறிய பிசிஆர் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
பிசிஆர் பரிசோதனையில் மூக்கு மற்றும் வாய் மூலம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அதை பரிசோதனை செய்வதன் மூலம், கொரோனா தொற்று பாதித்திருக்கிறதா என்பதை கண்டறிய முடியும். இந்த சோதனையில் முடிவுகள் வர தாமதமானாலும் துல்லியமாக இருக்கும்.
சீனாவில் ஆசனவாய் கொரோனா பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சில பகுதிகளில் ஆசனவாயில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆசனவாய் கொரோனா பரிசோதனைகள் மூலம், மக்களிடையே கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் வேகமாக உயரும் என சீன மருத்துவர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர்.
ஆசனவாய் கொரோனா பரிசோதனைக்கு கூறப்படும் அறிவியல் காரணத்தை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, சுவாசப் பாதையைக் காட்டிலும் ஆசனவாயில் நீண்ட நேரத்துக்கு இருக்கும் என சீனாவை சேர்ந்த மூத்த மருத்துவ வல்லுநரான லி தொங்ஜெங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்