சாட்டிலைட் 'ஃபோட்டோல' புதிய 'ஆதாரம்' கிடைச்சிருக்கு...! இது 'அவங்களோட' ரொம்ப நாள் பிளான்...! - 2020-மே மாசத்துக்கு அப்புறம் தான் 'வேலைய' தொடங்கியிருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூடான் எல்லைக்குள் சீனா புகுந்து செய்துள்ள காரியம் புதிய செயற்கைக் கோள் படம் மூலம் வெளியே தெரிய வந்துள்ளது.

சாட்டிலைட் 'ஃபோட்டோல' புதிய 'ஆதாரம்' கிடைச்சிருக்கு...! இது 'அவங்களோட' ரொம்ப நாள் பிளான்...! - 2020-மே மாசத்துக்கு அப்புறம் தான் 'வேலைய' தொடங்கியிருக்காங்க...!

பூடான் நாட்டையும் ஆக்கிரமித்து சீனா அட்டூழியம் செய்து வருகிறது. பூடானை சீனா ஆக்கிரமித்து வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக முடியும் என கருதப்படுகிறது. பூடானிடம் வலிமையான ஆயுதப்படை கிடையாது.

China created 4 villages in Bhutan exposed satellite photo

பூடானில் சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக இன்டல்லேப் என்ற சர்வதேச செயற்கைக்கோள் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் டி-அடிஸ் என்ற நிறுவனம் ஃபோட்டோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில், பூடானுக்குள் கிட்டத்தட்ட 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு சீனா ஆக்கிரமித்துள்ளது தெரிய வந்துள்ளது.

China created 4 villages in Bhutan exposed satellite photo

கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. இன்னும் ஒருபடி மேல் சென்று அங்கு 4 கிராமங்களையும் சீனா உருவாக்கியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 2017-ஆம் ஆண்டு பிரச்சனையாக வெடித்த டோக்லாம் பகுதிக்கு பக்கத்தில் தான் இந்த ஆக்கிரமிப்பு பகுதிகள் உள்ளன.

பூடான் இந்தியாவையே முழுமையாக நம்பியிருக்கும் சிறிய நாடாகும். இங்கு வலுவான ராணுவ அடித்தளம் எதுவும் கிடையாது. அனைத்து வகையான உதவிகள், ஆலோசனைகள், பாதுகாப்பு போன்றவற்றை இந்தியா தான் பூடானுக்கு செய்து வருகிறது.

ஆனால், இந்தியாவின் அரவணைப்பில் இருந்து விடுவிக்க சீனா பல காரியங்களை செய்து பார்த்து வருகிறது. ஆனால் பூடான் மசியவில்லை.

இந்தியாவிடம் எல்லைப் பிரச்சினை செய்வது போன்று, பூடானிடமும் நெடுங்காலமாக எல்லைப் பிரச்சினையை சீனா செய்து வருகிறது.

இந்த நிலையில், பூடானை தற்போது வெளிப்படையாக சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. மே-2020-ல் இருந்து நவம்பர்-2021 மாத இடைவெளிக்குள் இந்த கிராமங்களை சீனா உருவாக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

CHINA, 4 VILLAGES, BHUTAN, SATELLITE, PHOTO

மற்ற செய்திகள்