“எது சீன வைரஸா?.. ஹலோ எஜ்யூஜ்மீ!!”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா சீனாவின் வுஹான் நகரில் உருவானதாக உலகமே கூறிவரும் நிலையில்,  அது அமெரிக்காவில் தோன்றியதாகவும், அமெரிக்க ராணுவம்தான் அதனை உலகம் முழுவதும் பரப்பிவருவதாகவும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

“எது சீன வைரஸா?.. ஹலோ எஜ்யூஜ்மீ!!”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!

இதனையடுத்து வாஷிங்டனில் உள்ள சீன தூதர் அழைக்கப்பட்டு, அவருக்கு அமெரிக்கா சார்பில் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி வரும் இந்த கொரோனா வைரஸை  ‘சீன வைரஸ்’ என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 

இதற்கு நியூயார்க் மேயர் பில் டி பிளேசியா, ‘இதுபோன்ற கருத்துகள் அமெரிக்கர்களுக்கும் ஆசியர்களுக்கும் இடையில் பிளவினை உண்டாக்கும்’ என தெரிவித்தார், இதற்கு சீனாவும் தனது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில்,  ‘அமெரிக்கா தனது சொந்த விஷயங்களை முதலில் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்று சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷூவாங் தெரிவித்துள்ளார். 

CORONAVIRUS, CHINA, AMERICA, TRUMP