'இதுல வர ஹீட் 15 கோடி டிகிரி செல்சியஸ்...' 'சூரியனை விட 10 மடங்கு வெப்பம்...' - 'செயற்கை சூரியனை' வெற்றிகரமாக இயக்கிய நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் 'செயற்கை சூரியன்' என்று அழைக்கப்படும் அதிநவீன அணுஉலையை வெற்றிகரமாக இயக்கி முதல்கட்ட சோதனைகளைச் செய்து முடித்ததாக அறிவித்திருக்கிறது சீன தேசிய அணுசக்தி கழகம் (CNNC).

'இதுல வர ஹீட் 15 கோடி டிகிரி செல்சியஸ்...' 'சூரியனை விட 10 மடங்கு வெப்பம்...' - 'செயற்கை சூரியனை' வெற்றிகரமாக இயக்கிய நாடு...!

இந்த அணு உலைகளில் 'அணுக்கரு பிளவு' என்னும் முறையைத்தான் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த முறையில் யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை சிறு சிறு அணுக்களாகப் பிரிக்கும்போது அதிக அளவிலான ஆற்றல் வெளிப்படும். இந்த ஆற்றலைப் பயன்படுத்தித்தான் அணு உலைகளில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

இந்த செயல்முறையின்போது அதிக அளவிலான கதிர் வீச்சும் வெளிப்படுவதாக கூறப்படுகிறது. இதை தவிர்க்க 'அணுக்கரு இணைவு' என்னும் முறையில் ஆற்றல் உண்டாக்க முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சூரியனிலும் இந்த முறையில் தான் ஆற்றல் உண்டாக்கப்படுகிறது. அதனால்தான் இதை 'செயற்கை சூரியன்' என அழைக்கிறார்கள். இதற்கு ஹைட்ரஜன் மற்றும் தூத்தேரியம் வாயுக்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக் கதிர்வீச்சு எதுவும் வெளிப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத சுத்தமான ஆற்றலை இதிலிருந்து கிடைக்க பெறுவதாகவும் இந்த முறையில் வெளிப்படும் வெப்பம் 15 கோடி டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது சூரியனின் மைய வெப்பத்தை விட 10 மடங்கு அதிகம் என்பது வியக்கவைக்கும் அம்சம் ஆகும்.

மற்ற செய்திகள்