‘மறுபடியும் மொதல்ல இருந்தா’!.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் 2ம் கட்ட கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இந்த நோயால் சீனாவில் 82,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,632 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது சீனாவில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலையில் சீனா இறங்கியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவிற்கு சென்றிருந்த 8 சீனர்கள் சில தினங்களுக்கு முன்பு சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் நாட்டிற்குள் கொரோனா நுழைந்துவிட்டது என சீனா அஞ்சுகிறது.
இதனால் ரஷ்யா எல்லையில் உள்ள ஷான்ஜி மாகாணத்தை சீனா முற்றிலும் முடக்கியுள்ளது. இதன்மூலம் சுமார் ஒரு கோடி மக்கள் லாக்டவுனால் முடங்கியுள்ளனர். மேலும் பீஜிங்கில் உள்ள ஜிம், நீச்சல் குளங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.