இந்தியாவோட 'சண்டை' போட்ட நேபாளத்துக்கு... செமத்தியா 'ஆப்பு' வச்ச சீனா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவுக்கு மத்தியிலும் சீனா, பாகிஸ்தான், நேபாளம் நாடுகள் தொடர்ந்து இந்தியாவுக்கு பல்வேறு தொல்லைகளை அளித்து வருகின்றன. எல்லைப்பகுதி தொடர்பாக இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதேபோல காஷ்மீரை ஆக்கிரமித்திட பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் நட்பு நாடான நேபாளமும் தற்போது இந்திய பகுதிகளை தன்னுடையதாக சொந்தம் கொண்டாடி வருகிறது.
சமீபத்தில் இந்திய பகுதிகளை தன்னுடைய வரைபடத்தில் சேர்த்து நேபாளம் பெரிய ஆளாக முயன்றது. இதை இந்தியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்தியா, நேபாள பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதாக அந்நாட்டு மக்கள் மத்தியில் நேபாள அரசு தொடர்ந்து விஷம கருத்துக்களை பரப்பி வருகிறது. இந்த நிலையில் சீனா, நேபாளத்தின் கிராமம் ஒன்றை ஆட்டையை போட்டு திபெத்துடன் இணைத்துள்ளது. சீனா நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள ரூய் கிராமத்தை ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கிராமம் இப்போது சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான திபெத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரூய் கிராமம் நேபாளத்தால் போரில் இழக்கப்படவில்லை அல்லது திபெத்துடனான எந்தவொரு சிறப்பு உடன்படிக்கைக்கும் உட்பட்டது அல்ல. இந்தியாவின் எல்லையை பற்றியே அங்குள்ளோர் சிந்தித்து கொண்டிருக்க சைடு கேப்பில் சீனா, நேபாளத்துக்கு ஆப்பு வைத்து விட்டது. நேபாள அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என்று அந்நாட்டு பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.
மற்ற செய்திகள்