'சீன ஆய்வகத்திலிருந்து'... 'புதிதாக பரவியுள்ள பாக்டீரியா நோய்'... 'பாதிப்பு எண்ணிக்கை கவலை அளிப்பதாக'... 'சீன பத்திரிகை செய்தி!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் புருசெல்லோசிஸ் என்ற புதிய வகை பாக்டீரியா பாதிப்பு பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கில் கன்சு மாகாணத்திலிருக்கும் லான்ஷோ பகுதியில் புருசெல்லோசிஸ் (Brucellosis) என்ற புதிய வகை பாக்டீரியா நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கால்நடைகளுடனான தொடர்பால் இந்த நோய் பரவுவதாகவும், இதுவரை 3,245 பேர் இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் காய்ச்சல் (Mediterranean Fever) என அழைக்கப்படும் இந்த நோய் பாதிப்பால் தலை வலி, தசை வலி, காய்ச்சல் ஏற்படுவதுடன் மூட்டு வலி, தசை வீக்கம் போன்றவை ஏற்படும் எனவும், இந்நோயால் பாதிக்கப்படும் ஆண்களின் விந்தணுக்கள் வீக்கம் அடைவதுடன் மலட்டுத்தன்மை கூட உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 21,000 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 3,245 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக அரிதாகவே பரவும் எனவும், அசுத்த உணவு அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதாலேயே வேகமாகப் பரவுமெனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இந்த நோயால் உயிரிழப்பு எதுவும் பதிவாகாத நிலையில், நோய் பாதிப்பு மற்றும் பரவல் கவலை அளிப்பதாக சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாக்டீரியா தொற்றுக் கிருமி சீனாவின் கால்நடைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வகத்திலிருந்து கடந்த ஆண்டு கசிந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்