'உலகம்' முழுவதும் 'ஒரு லட்சம்' பேரை... 'பலி' கொடுத்த பிறகு 'ஞானக் கண்' திறந்து... 'சீனா' வெளியிட்ட முக்கிய 'அறிவிப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்நாயை மனிதர்களின் நட்பின விலங்காக கருத வேண்டும். இனிமேல் நாய்க்கறியை உணவாக உண்ணக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
வூகானில் இருக்கும் மாமிசக் கடையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக செய்தி வெளியானதை அடுத்து இந்த முடிவை சீன அரசு எடுத்துள்ளது. இதற்காக அந்த நாட்டு அரசு வரைவு நகலை கொண்டு வந்துள்ளது.
சீனாவின் மோசமான உணவுப் பழக்கத்தினால்தான் கொரோனா வைரஸ் உருவாகி உலக மக்களின் உயிரை பறித்து வருகிறது என்ற எண்ணம் உலக மக்களின் மனதில் வலுத்துள்ளது.
தற்போது இந்த வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த நிலையில் அசைவ உணவு குறித்து, சீன மக்களுக்கு அந்த நாடு சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
அந்த நாட்டின் விவசாயத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள உத்தரவில், ''இதுவரை நாயை பாரம்பரிய விலங்காக கருதி வந்தோம். தற்போது, நாயை மனித குலத்திற்கான நட்பின விலங்காக அறிவிக்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் பண்ணையில் வைத்து வளர்க்கப்படும் விலங்காக நாயை கருதுவதில்லை. இனிமேல் சீனாவும் அதுபோல்தான் கருத வேண்டும். உணவுக்காக பயன்படுத்தக் கூடாது. வர்த்தகமும் செய்யக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பு கடந்த புதன் கிழமை வெளியானது. எந்த விலங்குகளை, பறவைகளை உண்ண வேண்டும் என்ற பட்டியலையும் சீன அரசு வெளியிட்டுள்ளது. மக்களின் பரிந்துரைகளுக்காக மே 8ஆம் தேதி வரை இணையத்தில் இந்தப் பட்டியல் இருக்கும் என்று சீனா அறிவித்துள்ளது. வரைவு நகலாக இருக்கும் இந்த தடைக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 70 சதவீதம் பேர் நாய்க்கறிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.