'கருப்பாக' மாறிய 'சீன' மருத்துவர்களின் சருமம்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்' பாதிப்பு... வெளியாகியுள்ள 'விளக்கம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீன மருத்துவர்கள் 2 பேருடைய சரும நிறம் வழக்கத்துக்கு மாறாக கருப்பாக மாறியுள்ளது.

'கருப்பாக' மாறிய 'சீன' மருத்துவர்களின் சருமம்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்' பாதிப்பு... வெளியாகியுள்ள 'விளக்கம்'...

சீனாவின் வுஹானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 25 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது வுஹானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 மருத்துவர்களின் சருமம் கருப்பு நிறமாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், வுஹானில் கொரோனா தாக்கத்திற்கு எதிராக போராடி வந்த மருத்துவர்கள் 2 பேருக்கு கடந்த ஜனவரி 18ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது முதல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வைரஸின் தாக்கம் அதிகமானதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து சிகிச்சையின் போது அவர்களுடைய சருமம் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அவர்களுடைய கல்லீரலில்  கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவர்களுடைய நிறத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். மேலும் கல்லீரல் பாதிப்பு சரியானதும் அவர்களுடைய சரும நிறம் பழைய நிலைக்கே திரும்பலாம் எனவும் நம்பப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.